'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
சூப்பர்ஹிட் படமான 'பெங்களூர் டேய்ஸ்' படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் வரிசையில், அடுத்து இயக்குனராக முடிசூடியிருக்கும் பெண் இயக்குனர் தான் ஸ்ரீபாலா கே.மேனன்... இப்போது திலீப் நடிப்பில் வெளியாகியுள்ள 'லவ் 24x7' படத்தை இயக்கியவர் இவர்தான். மலையாள சினிமாவின் லெஜன்ட்டான சத்யன் அந்திகாடுவின் சிஷ்யை. அவரது நான்கு படங்களில் உதவி இயக்குனராகவும், ஒரு படத்தில் துணை இயக்குனராகவும் வேலைபார்த்த மிகப்பெரிய ஹிஸ்டரி உடையவர்.
ஆனாலும் இந்தப்படத்தை இயக்கும்போது ஆரம்பத்தில் இருந்து கொஞ்சம் பதட்டமாகவே இருந்தேன் என்கிறார் ஸ்ரீபாலா மேனன்.. காரணம் இந்தப்படத்தில் டிவி சேனலின் சேர்மன் கேரக்டரில் நடித்திருக்கும் பிரபல நடிகரும் கதாசிரியருமான சீனிவாசன் தான். “சீனிவாசன் சார் படங்களை என் சிறுவயது முதல் பார்த்து வருகிறேன்.. அதனால் அவரை அருகில் இருந்து ஆக்சன்-கட் சொல்லி வேலை வாங்குவது கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது.. அவரது காட்சிகளை படமாக்கும்போது ஒரு பள்ளிக்கூட வாத்தியாரின் முன் மாணவி போல தான் என்னை உணர்ந்தேன்” என்கிறார் ஸ்ரீபாலா மேனன்.