ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹீரோயினாக அறிமுகமாகி இன்று காமெடி குணசித்திர நடிகையாக உருவெடுத்திருப்பவர் ஊர்வசி. இந்த இமேஜை தானே உருவாக்கிக் கொண்டது என்கிறார் ஊர்வசி. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
300 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். இப்போதும் காதல் காட்சிகளில் நெருங்கி நடிப்பது என்றால் கூச்சமாக இருக்கிறது. இதைச் சொல்வதற்கு நான் கூச்சப்படவில்லை. காதல் காட்சிகளில் இருந்து தப்பிப்பதற்கு தான் அதில் கொஞ்சம் காமெடியை சேர்க்க ஆரம்பித்தேன். அது மக்களுக்கு பிடித்து விட அதையே தொடர்கிறேன்.
அம்மா கேரக்டர்களை காமெடியாக்கி அதன் தன்மையை நான் கெடுத்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு என் மீது வைக்கப்படுவதுண்டு. இதுவும் நானே ஏற்படுத்திக் கொண்டது தான். அம்மா என்றால் கணவனுக்காக அழ வேண்டும், மகனுக்காக உழைக்க வேண்டும் என்றுதான் சினிமாக்கள் காட்டி வந்தது. நிஜத்திலும் அப்படித்தான். சிரிப்பு என்பதே இல்லாத அம்மாக்களின் கேரக்டரை சிரித்த கேரக்டர்களாக ஏன் மாற்றக்கூடாது என்று கருதி அம்மா கேரக்டரை மாற்றினேன். அதையும் மக்கள் ரசித்தார்கள் தொடர்ந்து நடித்தேன். நடித்துக் கொண்டே இருப்பேன். என்கிறார் ஊர்வசி.