Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாகுபலி வெற்றி எதிரொலி: சரத்திரப் படம் இயக்குகிறார் எஸ்.பி.ஜனநாதன்

23 ஜூலை, 2015 - 14:07 IST
எழுத்தின் அளவு:
SP-Jananathan-likes-to-direct-Historic-film

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் நீண்ட வருடங்களாக தஞ்சை பெரிய கோவில் பற்றியும், சோழ மன்னர்களின் ஆட்சிமுறை, வாழ்க்கை முறை பற்றியும் ஆராய்ந்து வருகிறார். சோழர்களின் பின்னணியில் தமிழர்களின் வரலாற்றை, பண்பாட்டை, கலாச்சாரத்தை சரித்திர படமாக எடுக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு. இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளை செய்து வருகிறார். தற்போது பாகுபலி படம் வெற்றி பெற்றிருப்பது அவருக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. படத்தின் பட்ஜெட் 200 கோடி என்பது தற்போதைய கணக்கு.


இதுபற்றி ஜனநாதன் கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாற்று பின்னணிதான் கதை களம். தமிழில் வரலாற்று படங்கள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. பாகுபலியின் வெற்றி அந்த தயக்கத்தை போக்கிவிட்டது. பாகுபலி முழு கற்பனைக் கதை. கற்பனை துளியும் கலக்காத வரலாற்ற படம்தான் எனது திட்டம். கற்பனையை விட பிரமிப்பான விஷயங்கள் நிஜ வரலாற்றில் இருக்கிறது. இந்தப் படத்தின் வாயிலாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் உயரிய நாகரீக வாழ்க்கையை உலகத்துக்கு காட்ட இருக்கிறேன்.


இது பெரிய பட்ஜெட் படம். ஆரம்பிக்க சில ஆண்டுகள் ஆகலாம். அதற்கு முன்பு எனது பாணியில் ஒரு ஆக்ஷன் எண்டர்டெயின்மெண்ட் படம் இயக்க இருக்கிறேன். இந்த பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் ஆரம்பித்து விடும் என்கிறார் ஜனா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in