இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மிர்ச்சி எனும் தெலுங்கு படத்தின் வாயிலாக வெற்றிப் பட இயக்குநராக அறியப்படும் டோலிவுட் இயக்குநர் கோரடலா சிவா இயக்கும் ஸ்ரீமந்துடு படத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நாயகனாக நடித்துள்ளார். அவருடன் முதன்முறையாக நடிகை ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்திருக்கும் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஸ்ரீமந்துடு படத்தை வரும் ஜூலை 31 ஆம் தேதி தணிக்கைக் குழுவினருக்கு திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யு சான்றிதழ் வழங்குவார்கள் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.