Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இப்ராஹிம் ராவுத்தர் மறைவு - விஜயகாந்த் அஞ்சலி!

22 ஜூலை, 2015 - 15:30 IST
எழுத்தின் அளவு:
Vijayakanth-pay-homage-to-Ibrahim-Ravuthar

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், இன்று(ஜூலை 22ம் தேதி) காலை காலமானார். இவர் நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் ஆவார். பால்ய காலத்திலிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள். விஜயகாந்த்தின் பல படங்களை இவர் தயாரித்துள்ளார். ஒருக்கட்டத்தில் மனகசப்பால் இருவரும் பிரிந்தனர்.


இந்நிலையில் இப்ராஹிம் ராவுத்தர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நேரில் சென்று நலம் விசாரித்தார். கூடவே தனது நண்பர் அப்படி கிடப்பதை பார்த்து கண்ணீரும் விட்டார் விஜயகாந்த். இந்நிலையில் ராவுத்தரின் மரண செய்திப்பற்றி கேள்விப்பட்ட விஜயகாந்த், நேராக ராவுத்தரின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக அவரது இல்லத்தில் இருந்தார்.


நாளை இறுதிசடங்கு


இப்ராஹிம் ராவுத்தரின் இறுதிச்சடங்கு நாளை நண்பகல் 12.45 மணியளவில் சென்னை, சாலிகிராமம், சிங்கப்பூர் பிளாசா அருகே உள்ள மசூதியில் நடைபெற இருக்கிறது.


திரையுலகினர் அஞ்சலி


ராவுத்தரின் உடலுக்கு விஜயகாந்த், அவரது மைத்துனர் எல்கே.சுதீஷ், அருண் பாண்டியன், கருணாஸ், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ரமேஷ் கண்ணா, வி.சேகர், பேரரசு உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in