பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாலிவுட்டில் இதுவரை நிகழ்ந்துள்ள வசூல் சாதனைகளை, "பஜ்ரங்கி பைஜான்" படம் முறியடிக்கும் என்று நடிகர் அமீர் கான் கூறியுள்ளார். சல்மான் கான், கரீனா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள "பஜரங்கி பைஜான்" படம், 3 நாட்களில், 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தை, நடிகர் அமீர் கான், தனது குடும்பத்துடன் பார்த்துள்ளார். இதன்பின் அமீர் கான் கூறியுள்ளதாவது, இந்த படத்தை பொறுத்தவரை, பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் என்பது ஒரு விஷயமே அல்ல. மனிதநேயத்தை உணர்த்தும் தரமான படம். வசூல் சாதனையை படைக்குமா என்று நீங்கள் தொடர்ந்து கேட்கிறீர்கள்...அதற்காக சொல்கிறேன், பாலிவுட்டில் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள அனைத்து வசூல் சாதனைகளையும், பஜ்ரங்கி பைஜான் படம் முறியடிக்கும். சல்மான் கான் ஒவ்வொரு காட்சியிலும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் காட்சிகள் உருவாக்கம் குறிப்பிடத்தக்கவகையில் உள்ளதாக அமீர் கான் கூறினார்.