ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மீரா ஜாஸ்மின் நடிக்க வந்து பதினான்கு வருடம் ஆகிவிட்டது. இப்போது திருமணமும் பண்ணிவிட்டார். வயதோ முப்பத்து நான்கை டச் பண்ணிவிட்டது. இனி கதாநாயகியாகவெல்லாம் நடிக்க முடியாது என்பது அவருக்கே தெரிந்திருக்கிறது. அதனால் தற்போது 'இதினுமப்புறம்' என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். படத்தில் வில்லன் நடிகர் ரியாஸ்கானின் மனைவியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். ரியாஸ்கானுக்கு மனைவியாக நடிக்கிறாரா என உடனே ஆச்சரியமும் பட வேண்டாம்.. உச் கொட்டவும் வேண்டாம்.
விடிவி கணேஷுக்கே ஜோடியாக நடித்துவிட்டவருக்கு இதெல்லாம் ஜுஜுபி மேட்டர். ஆனால் அதைவிட ஆச்சர்யமான விஷயம் மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடிக்கிறார் என்பதுதான். இந்தப்படத்தை மனோஜ் அலுங்கல் என்பவர் தானே தயாரித்து, இயக்குனராகவும் அறிமுகமாகிறார். எண்பதுகளில் நடப்பது போன்று கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இதுதவிர 'மழநீர்த்துளிகள்' என்கிற படத்தில் நரேனுடன் இணைந்து நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்.