தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹீரோக்கள் உடன் இல்லாமல் தனித்தனியாக த்ரிஷாவோ, நயன்தாராவோ, காஜல் அகர்வாலோ, சமந்தாவோ, ஸ்ருதிஹாசனோ நடித்த பாடல் காட்சி ஒன்று டிவியில் வரும்போது அதை அப்படியே ப்ரீஸ் செய்து நிறுத்திவிட்டு, அது, குறிப்பிட்ட நடிகை நடித்த எந்தப்படம் என்று உங்களால் சொல்லமுடியுமா..? நிச்சயமாக முடியாது.. காரணம் இவர்களின் அனைத்து படங்களிலும் ஒரேவிதமான கெட்டப், நடிப்பு, டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் என எல்லோருமே ஒரு வட்டத்துக்குள் சுற்றுவதால், இன்ன படம் தான் இது என கண்டுபிடிப்பது கடினம் தான்.
ஆனால் இவர்களுக்கெல்லாம் விதிவிலக்கு ஒருவர் இருக்கிறார் என்றால் அதுதான் நடிகை பார்வதி (மேனன்). அவர் நடித்த பூ, மரியான், பெங்களூர் டேய்ஸ், உத்தம் வில்லன் என ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பு, கெட்டப் என எல்லாமே தனித்தன்மையுடன் இருக்கும். நடித்தது சில படங்கள் தான் என்றாலும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் எதிர்பார்ப்பார். எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், தனக்கு கதை பிடிக்கவில்லையென்றால் அது எந்த நடிகரோட படமாக இருந்தாலும் நோ சொல்கிற அதிரடியான நடிகை தான் பார்வதி.