ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சில வருடங்களுக்கு முன் பிசியான ஹீரோவாக இருந்தார் பரத். அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததினால் பரத்துக்கு படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. பின்னர் ஒரு கட்டத்தில் படங்களே இல்லாமல்போனதால் மலையாளத்தில் நடிக்கப்போனார் பரத். பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் சிசிஎல் என்கிற நட்சத்திர கிரிக்கெட்டில் கலந்து கொண்டார். இந்நிலையில் பரத்துக்கு புதிய பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்துள்ளன. தற்போது 'சிம்பா', 'என்னோடு விளையாடு' உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இன்றைய தினம் (ஜூலை-21) பரத்துக்கு விசேஷமான நாள்! யெஸ்... பரத்துக்கு இன்று பிறந்த நாள்! தன் பிறந்தநாளை முன்னிட்டு தான் நடித்து வரும் 'சிம்பா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விளம்பரங்கள் நாளிதழ்களில் வர வேண்டும் என்று ஆசைப்பட்ட பரத், தன் மானேஜர் மூலம் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் பேசி சம்மதிக்க வைத்தாராம்.