அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், ஆஷா சரத் மற்றும் பலர் நடிக்கும் 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாம். 'உத்தம வில்லன்' படம் தோல்வியடைந்தாலும் 'பாபநாசம்' படத்தின் வெற்றி கமல்ஹாசனின் மார்க்கெட்டை அப்படியே காப்பாற்றிவிட்டது. இந்த 'தூங்காவனம்' படம் பிரெஞ்சு படத்தின் ரீமேக் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் இதுவரை அது பற்றி எதுவும் சொல்லவில்லை.
மே மாதக் கடைசியில் ஐதராபாத்தில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு மாத காலம் அங்கு நடைபெற்றது. கடந்த ஒரு மாதமாக சென்னையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டதாம்.
அது பற்றி பிரகாஷ்ராஜ் அவருடைய டிவிட்டர் தளத்தில் “லெஜன்ட்டுடன் ஒரு இனிமையான தருணம், திறமையான குழுவினருடன் கடைசிநாள் படப்பிடிப்பு, மிகவும் மகிழ்ச்சியாக இருந்த்து,” என கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்துன் பதிவிட்டுள்ளார்.