ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குநர்களில் ஒருவரான விவி விநாயக் இயக்கும் படத்தில் நடித்து வரும் அக்கினேனி குடும்பத்தின் வாரிசான அகில் அப்படத்தின் வாயிலாக டோலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகின்றார். பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாகும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சோனல் சவுகான் நடிக்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தைத் தொடர்ந்து அகில் தனது அடுத்த படத்தை தேர்வு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றாராம். இயக்குநர் ஸ்ரீனு வைட்டால கூறிய கதை அகிலுக்கு பிடித்துப் போகவே அப்படத்தில் நடிக்க அகில் விருப்பம் தெரிவித்துள்ளாராம். மேலும் இப்படத்தை டி.வி.வி. என்டர்டையின்மென்ட்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இயக்குநர் ஸ்ரீனு வைட்டால தற்போது ராம் சரண் நடிக்கும் புரூஸ் லீ படத்தை இயக்கி வருகின்றார். டோலிவுட்டின் பிரபல நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகனான அகில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.