கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சல்மான் கான் நடிப்பில் வௌியாகியுள்ள பஜ்ரங்கி பைஜான் படம் மூன்று நாளில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. கபீர் கான் இயக்கத்தில், சல்மான், கரீனா கபூர் நடிப்பில் வௌியான படம் பஜ்ரங்கி பைஜான். பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்த சிறுமி ஒருவர் தன் பெற்றோரை தவற விடுகிறார், அந்த சிறுமியை மீண்டு சல்மான் கான் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் செல்கிறார், அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தான் பஜ்ரங்கி பைஜான் படத்தின் மீதிக்கதை. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ரம்ஜான் விருந்தாக ஜூலை 17ம் தேதி வௌியான இப்படம் முதல் நாளில் ரூ.27.25 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.36.60 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.38.75 கோடியும் என மொத்தமாக ரூ.102.60 கோடி வசூலாகியிருக்கிறது. சல்மானின் முந்தைய படமான கிக் படம் மூன்று நாளில் ரூ.83.83 கோடி தான் வசூலித்தது. தற்போது அந்த சாதனையை பஜ்ரங்கி பைஜான் படம் முறியடித்திருக்கிறது. மேலும் 8வது முறையாக சல்மானின் படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.