‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மேதை, அரும்பு மீசை குறும்பு பார்வை உள்பட சில படங்களில் நடித்தவர் சாரிகா. இவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகளாகியும் பின்தங்கியே இருக்கிறார். அதோடு தனது உடம்பையும் பராமரிக்காமல் விட்டு விட்டதால் இப்போது ஊதிப்பெருத்துப்போய் இருக்கிறார் சாரிகா. இந்த நிலையில், நிராயுதம் படத்துக்கு கவர்ச்சிகரமான கதாநாயகி தேடிவந்த இயக்குனர் ராஜதுரையின் கண்ணில் சாரிகா பட, உடனே அவரை ஒப்பந்தம் செய்து அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதில் வில்லனின் கையில் சிக்கும் சாரிகாவின் உடைகளை அவர் கிழித்தெறிந்து விடுவாராம். அதனால், நிர்வாணமாக்கப்படும் சாரிகா, சில பேப்பர்களை தனது உடம்பில் கட்டிக்கொண்டுதான் அங்கிருந்து தப்பித்து வருவாராம்.
இந்த கேரக்டரில் படுகவர்ச்சியாக நடித்துள்ளார் சாரிகா. இந்த சேதியறிந்து ஷகீலாவை மனதில் கொண்டு கிளாமர் கதைகளை ரெடி பண்ணி வைத்திருந்த சில ஆபாசப்பட இயக்குனர்கள் சாரிகாவை முற்றுகையிட்டுள்ளனர். ஏற்கனவே சரியான படவாய்ப்பு இல்லாமல் சில ஆண்டுகளாக தடுமாறிக்கொண்டு வந்த சாரிகா, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக தேடி வந்த அத்தனை கவர்ச்சி படங்களுக்கும் கால்சீட் கொடுத்து விட்டாராம்.
ஆக, இப்போது ஆபாச நடிகை ஷகிலா கேரக்டர் நடிகையாகி விட்டதால், அவர் விட்டுச்சென்ற காலி இடத்தை தான் நிரப்ப கோதாவில் குதிக்கிறார் சாரிகா.