வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி படங்களின் வெற்றியை தொடர்ந்து ராசியான நடிகை எனப் பெயர் பெற்றார் நாயகி சுரபி. ஜெய் நடிப்பில் உருவாகிவரும் புகழ் படத்தில் ஜெய்க்கு இணையாக நடித்து வருகிறார் சுரபி. பிலிம் டிபார்ட்மெண்ட் சுஷாந்த் தயாரிப்பில், இயக்குனர் மணிமாறன் இயக்கும் புகழ் படத்தைப் பற்றி சுரபி கூறும்பொழுது “இப்படத்தில் எனது கேரக்டரின் பெயர் புவனா. நான் நிஜ வாழ்வில் இருப்பது போன்று மனதில் உள்ளதை உள்ளபடி எதையும் மறைக்காமல் கூறும் கதாப்பாத்திரம் அமைந்திருந்தது. அதனாலோ என்னவோ இந்தக் கதாபாத்திரம் என் மனதுக்கு பிடித்து போன பாத்திரம் ஆனது. இப்படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிப்பது செம்ம த்ரில். எந்தக் காரியத்தில் ஈடுப்பட்டாலும் அதில் வெற்றிப் பெற முழு முயற்சி எடுக்க வேண்டும் என தீவிரமாக நம்புபவர். கார் ரேசிங்கில் பெருத்த ஈடுபாடுக் கொண்ட ஜெய் தல அஜித் போன்று பல போட்டிகள் வென்று புகழ்பெற வாழ்த்துகிறேன்.
இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் நடித்ததும், ஒளிபதிவாளர் வேல்ராஜ் சாருடன் மீண்டும் இணைவதும், மணிமாறன் சுவராசியமான காட்சிகளை பதட்டமில்லாமல் படமாக்க கூடியவர். இவரது இயக்கத்தில் வேலையை செய்ததுதான் எனக்கு இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அட்டாக் படத்தில் நடிப்பதற்கு ஒரு பயிற்சியாக இருந்தது. அட்டாக் படத்தில் நான் ஒரு பைக் மெக்கானிக் ரோலில் நடிக்கிறேன். நிஜ வாழ்வில் இப்படி ஒருவரை நான் சந்தித்து இல்லை, ஆகவே இந்த ரோல் எனக்கு சவாலாகவே இருந்தது.
விவேக் மெர்வின் இசையில் அனைத்து பாடல்களும் முணுமுணுக்க வைக்கிறது. புகழ் படத்தின் டிரைலர் 23ஆம் தேதி வெளிவருகிறது. ஒரு சாதாரண ரசிகை போல் டிரைலரை பார்க்க பெரும் ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார் சுரபி.