தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான வெங்கடேஷ் நடிப்பில் வெளிவந்த கோபாலா கோபாலா எனும் தெலுங்கு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து வெங்கடேஷ் நடிக்கும் படங்கள் குறித்து தகவல்கள் வெளிவந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் தமிழில் வெளிவந்த சலீம் படத்தை தெலுங்கில் டாக்டர் சலீம் என்ற பெயரில் இயக்கி வெற்றி கண்ட இயக்குநர் நிர்மல் குமார் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க வெங்கடேஷ் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இயக்குநர் கரந்தி மாதவ் இயக்கும் படத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. டோலிவுட்டில் ஒனமல்லுஎனும் படத்தின் வாயிலாக அறியப்படும் இயக்குநராக மாறிய கரந்தி மாதவ் நடிகர் சர்வானந்த் நடிப்பில் மல்லி மல்லி இதி ராணி ரோஜு எனும் படத்தை இயக்கி வெற்றி கண்டார். கரந்தி மாதவ் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. சுரேஷ் புரொடக்ஷன் பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என்றும் கூறப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.