‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஜெயம் ரவி நாயகனாக நடித்த 'ரோமியோ ஜுலியட்' படம் கடந்த மாதம் வெளியானது. முதலுக்கு மோசமில்லை என்ற நிலையில் படம் ஓரளவிற்கு வசூல் செய்ததாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவருடைய இரண்டு படங்களை அடுத்தடுத்து வெளியிடும் முடிவிற்கு இரண்டு படங்களின் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.
ஜெயம் ரவி, சுமார் இரண்டு வருடங்களாக அவருடைய அண்ணன் ராஜா இயக்கத்தில் நடித்துள்ள 'தனி ஒருவன்' படத்தின் இசையை ஜுலை 22ம் தேதியும், படத்தை ஆகஸ்ட் மாதமும் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அநேகமாக ஆகஸ்ட் 15 அன்று இந்தப் படம் வெளியாக வாய்ப்புள்ளது. அதற்கு முன்னதாக ஜுலை 20ம் தேதி, அதாவது நாளை அவர் நடித்துள்ள மற்றொரு படமான 'சகலகலா வல்லவன்' படத்தை இசையையும், படத்தை ஜுலை 31ம் தேதியும் வெளியிட உள்ளார்கள்.