ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள "த்ரிஷா இல்லன்னா நயன்தாரா" படத்தின் டிரைலருக்கு, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநலச்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இசையமைப்பாளராக இருந்து டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகனாக மாறியிருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். டார்லிங் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். கயல் ஆனந்தியுடன் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடி போட்டு நடித்துள்ள த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம், விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில், யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த டிரைலரின் ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர். உருவம் பதித்த டி.சர்ட்டை, ஜி.வி.பிரகாஷ் குமார் அணிந்துள்ளார். ஹீரோயின் அவர் மீது செருப்பை வீசுகிறார். அந்த செருப்பு, அந்த டி.சர்ட்டின் மீது படுகிறது.