தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த படம் தாமிரபரணி. இந்த படத்திற்காக கேரளாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதியானவர் பானு. அதற்கு முன்பு சரத்குமார் நடித்த ஐயா படத்துக்காக நயன்தாராவை தமிழுக்கு கொண்டு வந்தவரும் அவரே. அதனால் இந்த படத்திற்கு பானு கமிட்டானபோது அடுத்த நயன்தாரா என்கிற அளவுக்கு பேசப்பட்டார். ஆனால் அவருக்கு தமிழில் பிரகாசமான எதிர்காலம் அமையவில்லை. அதனால் சில சின்ன படங்களில் மட்டுமே நடித்து வந்தார் பானு. தற்போது அவரது மார்க்கெட் பெரிதாக இல்லாத நிலையிலும் சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கதாநாயகி வேடம்தான் வேண்டும் என்று யாரிடமும் அடம்பிக்காத பானு, வித்தியாசமான பர்பார்மென்ஸ் வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதேசமயம் தனது கதாநாயகி மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கும் முயற்சியாக தற்போது உடல் அழகை மெருகேற்றும் வேலைகளில் இறங்கியுள்ளார் பானு. காரணம், அவரிடமிருந்த வசீகரமான தோற்றம் தற்போது சற்று காணாமல்போயிருப்பதாக அவரது அபிமானத்திற்குரிய சில டைரக்டர்கள் சொன்னார்களாம்.
அதோடு மீண்டும் பழைய புதுப்பொலிவான அழகை கொண்டு வந்து விட்டால் கதாநாயகி வேடம் தருவதாகவும் உறுதிமொழி வழங்கி விட்டார்களாம். அதனால் சமீபகாலமாக ஆயுர்வேத சிகிச்சைகளில் ஈடுபடும் பானு, தனது முகத்திலும் எந்த நேரமும் ஏதாவது மூலிகை வாசணை பொருட்களை பூசியபடியே காட்சி தருகிறார்.