ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினி முருகன், பாம்பு சட்டை, இது என்ன மாயம் மற்றும் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் என 5 படங்களில் தற்போது நாயகியாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். நடித்த முதல் படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், கீர்த்தியின் மார்க்கெட் இந்த அளவுக்கு சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில்கூட கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக ஒரு செய்தி கிசுகிசுத்தது. அந்த அளவுக்கு வந்தவேகத்திலேயே உச்ச நடிகர்களின் படங்களில் நடிக்கும் அளவுக்கு பேசப்படும் நடிகையாகியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இப்படி பரவலாக பேசப்படும் நடிகையாகியிருக்கும் கீர்த்தி சுரேஷ், ஓ காதல் கண்மணி படத்தையடுத்து கார்த்தியை நாயகனாக வைத்து மணிரத்னம் இயக்க இருக்கும் படத்திலும் நாயகியாக நடிக்கயிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தருகின்றன.