ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் விருப்ப நாயகியாக அவர்களது படங்களில் நடித்து வரும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு, டோலிவுட் ரசிகர்களும் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவிதேஜாவுடன் ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள கிக் 2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ராகுல் ப்ரீத்தி சிங் ஜூனியர் என்.டி.ஆருடன் புரூஸ் லீ படத்திலும் ராம் சரணுடன் ஒரு படத்திலும் நாயகியாக நடித்து வருகின்றார். மேலும் டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங்கை நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு டோலிவுட்டில் பிசியாக காணப்படும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள ராகுல் ப்ரீத்தி சிங், ஜூனியர் என்.டி.ஆரின் நடனம் மற்றும் நடிப்பு திறமை தன்னை வெகுவாக கவர்ந்ததாகவும் இதனால் அவருக்கு தான் தீவிர ரசிகையாக மாறிவிட்டதாகவும் கூறுகின்றார்.