ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சில நடிகர்கள் தங்களைப் போன்ற சக நடிகர்கள், ஒன்றாக போட்டியில் இருக்கும் நடிகர்களுடன் இணக்கமாக நட்பாக இருப்பதில்லை. அவர்களின் படங்கள் வரும் போது வாழ்த்துவதோ சம்பந்தப்பட்ட படத்தின் விழாக்களுக்குச் செல்வதோ இல்லை.அவ்வளவு பெருந்தன்மை அவர்களுக்கு. ஆனால் நடிகர் ஆர்யா இவர்களில் விதிவிலக்காக இருக்கிறார். பெருந்தன்மையிலோ சில நட்சத்திரங்களுக்கு முன்னோடியாகவும் இருக்கிறார்.
ஆர்யாவைச் சுற்றி பெண்கள் கூட்டம் இருக்கும், அவருக்கு நடிகைகள்தான் நண்பர்கள். நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா, ஹன்சிகா, டாப்ஸி போன்ற முன்னணி நடிகைகள் அனைவரும் ஆர்யாவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளனர். அடிக்கடி சந்திப்பதும் பிரியாணி விருந்து கொடுப்பதும் ஆர்யாவின் பாணி. அதனால்தான் ஆர்யா போல யார்யா, ஆர்யா இஸ் ஸ்வீட் பாய்.. ஸ்வீட் ராஸ்கல் என்றெல்லாம் நட்பு நடிகைகள் கூறுகிறார்கள். சமூக வலைதளங்களில் ட்வீட்டடிக்கிறார்கள்.
கமல் கூட ஒரு முறை இனி காதல் மன்னன் பட்டத்தை ஆர்யாவுக்குக் கொடுத்து விடலாம் என்றார் ஜாலியாக. இப்படி நடிகைகளிடம் மட்டுமல்ல சம போட்டியாளர்களாக உள்ள சக நடிகர்களிடமும் நட்பாக உள்ளார் ஆர்யா. அது மட்டுமல்ல அவர்களின் படங்களில் தோன்றியும் படத்தின் பலத்துக்கு உதவுகிறார்.
சிவா மனசுல சக்தி யில் ஜீவாவுடன் தோன்றினார். ஒருகல் ஒரு கண்ணாடியில் தோன்றி உதயநிதி ஸ்டாலினுக்கு உதவினார். ஜீவா வில் விஷ்ணுவுக்காக தோன்றினார்.. விக்ராந்த் நடிக்கும் தாக்க தாக்க படத்தில் விஷாலுடன் தோன்றி நடனம் ஆடி ப்ரமோ பாடலுக்கு உதவியிருக்கிறார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் தோன்றி பார்த்திபனுக்காக நடித்துக் கொடுத்தார். ஜெயம் ரவிக்காக ரோமியோ ஜூலியட் . சிவி குமாருக்காக இன்று நேற்று நாளை யில் வந்தார். இதற்கெல்லாம் முன்பே மாயக் கண்ணாடி, காதல் சொல்லவந்தேன். வா போன்ற படங்களில் தோன்றியவர்தான் ஆர்யா.
இன்றைய நடிகர்களில் இத்தனை படங்களில் நட்புக்காகத் தோன்றியவர்கள் யாராவது இருக்கிறார்களா? இப்போது சொல்லலாமா ஆர்யா போல நல்ல மனசுள்ள நடிகர் யார்யா? என்று..!