ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
ஜெயம்' ரவி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா என்ற பெயரில் ஜெயம் ராஜா இயக்கியுள்ள படம் 'தனி ஒருவன்'. 'ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது கடல் படத்துக்குப் பிறகு இப்படத்தில் அரவிந்த் சாமி வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெயம் ராஜாவும் 'ஜெயம்' ரவியும் இணையும் ஆறாவது படம் இது. தனி ஒருவன் படத்தை ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டதும் அதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ரோமியோ ஜுலியட் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்ததால் தனி ஒருவன் படத்துக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. எனவே 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது ஏ.ஜி.எஸ்.நிறுவனம். மற்றொரு காரணம், 'ஜெயம்' ரவியும் அவரது அண்ணன் ராஜாவும் இணைந்து உருவாக்கிய அத்தனை படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்ததும் காரணம். இதற்கிடையில், ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் முதலானோர் நடித்துள்ள படம் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தையும் தனி ஒருவன் வெளியாகும் அதே ஆகஸ்ட் 14-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். எம்.ராஜேஷ், ஆர்யா, சந்தானம் கூட்டணி இணைந்துள்ள படம் என்பதாலும், ஆர்யா நடிக்கும் 25-ஆவது படம் என்பதாலும் வி.எஸ்.ஓ.பி. படதின் மீதும் ஓரளவு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.