Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பஜ்ரங்கி பைஜான் படத்திற்கு புரோமோஷனே தேவையில்லை : கரீனா கபூர்

17 ஜூலை, 2015 - 12:58 IST
எழுத்தின் அளவு:
No-need-to-promote-Bajrangi-Bhaijaan--Kareena-Kapoor-Khan

பஜ்ரங்கி பைஜான் படத்திற்கு, புரோமோஷன் தேவையில்லை, ஏனெனில், படத்தின் வித்தியாசமான கதையே, படத்திற்கு பெரும்பலம் என்று நடிகை கரீனா கபூர் கான் கூறியுள்ளார்.


"பாடிகார்ட்" படத்தில் கலக்கிய சல்மான் கான் - கரீனா கபூர் ஜோடி, "பஜ்ரங்கி பைஜான்" படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. பாடிகார்டு படம் வெற்றி பெற்றதைப்போல், இப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பஜ்ரங்கி பைஜான் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பஜ்ரங்கி பைஜான் படத்தில், தனது கேரக்டர் மற்றும் சூட்டிங்கின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கரீனா கபூர் கான் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்....


பஜ்ரங்கி பைஜான் படத்தில் உங்களது கேரக்டர் குறித்து...




பஜ்ரங்கி பைஜான் படத்தில், டில்லி பள்ள ஒன்றின் டீச்சர் கேரக்டரில்,எளிமையாகவும், அதேசமயத்தில், மெச்சூரான பெண் கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த படத்தில் நடித்தது புதுவித அனுபவமாக இருந்தது. இந்த மாற்றத்தை நான் விரும்பி ஏற்றுக்கொண்டேன். அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களே, நாம் யார் என்பதை நமக்கு உணர்த்திவருகின்றன.


புரோமோஷன் என்பது தற்போதைய காலகட்டத்தில் அவசியமானதா?


நிச்சயமாக. தற்போது நிலவும் போட்டியுலகி்ல், படங்களுக்கு புரோமோஷனல் ஈவன்ட் என்பது அவசியமானதாகிவிடுகிறது. ஆனால், பஜ்ரங்கி பைஜான் படத்திற்கு, புரோமோஷன் தேவையில்லை, ஏனெனில், படத்தின் வித்தியாசமான கதையே, படத்திற்கு பெரும்பலம்தான். படத்தின் டிரைலரை பார்த்த பலர், படத்தை அப்போதே பாராட்டத் துவங்கிவிட்டனர். சல்மான் கானுடன் ஹீரோ மற்றும் பாடிகார்டு படத்திற்கு பிறகு, இப்படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளேன்.




இது மதம் தொடர்பான படமா?..


இல்லை, நிச்சயமாக இல்லை. பலர் அப்படித்தான் தவறுதலாக நினைக்கிறார்கள். படத்தின் பெயரை மட்டும் பார்த்து அவர்கள் அந்த முடிவிற்கு வந்துள்ளனர். இது இந்து மற்றும் இஸ்லாமிய மதம் தொடர்பான படம் அல்ல. பாகிஸ்தான் சிறுமி ஓருத்தி, டில்லியில் பெற்றோரை இழந்து தவிக்கிறாள். அவள் மீண்டும் பாகிஸ்தான் திரும்புவதே படத்தின் கதை. இது உணர்ச்சிகரமான படம்.


இந்த படத்தை ஏன் ஒப்புக்கொண்டீர்கள்?


இந்த படத்தில் நடிக்க நான் சம்மதம் தெரிவித்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சல்மான் உடன் இணைந்து நடிப்பது மற்றும் படத்தின் கதை உள்ளிட்டவைகளே, என்னை இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்க வைத்தன. இயக்குநர் கபீர் கானுக்கு, பாலிவுட்டில் ரசிகர்கள் அதிகம். என்னுடைய 15 ஆண்டுகால திரையுலக வரலாற்றில், முதல்முறையாக, கபீர் கான் இயக்கத்தில் நடித்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.


சல்மான் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம்


பாடிகார்ட் படத்திற்கு, சல்மான் கானுடன் இணைந்து மீண்டும் இப்படத்தில் நடித்துள்ளேன். சல்மான் கானை, எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும், எனது சகோதரி, அவருடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது நானும் அவருடன் இணைந்து நடித்துவருகிறேன். சல்மான் கான், இதுவரை நடித்திராத புதுவிதமான கேரக்டரில் இப்படத்தில் நடித்துள்ளார்.


படத்தில் நடித்த சிறுமி குறித்து..


பஜ்ரங்கி பைஜான் படத்தில் நானும், சல்மான் கானும் நடித்தது கூட பெரிய விஷயமல்ல. அந்த சிறுமிதான் படத்தின் நட்சத்திரமே. படத்தில் அந்தளவிற்கு, உணர்ச்சிகரமான நடிப்பை அச்சிறுமி வெளிப்படுத்தியுள்ளார். சிறுமியின் நடிப்பு, படம் பார்க்கும் அனைவராலும் பாராட்டப்படும்.


காஷ்மீரில் நடிக்கும் சூட்டிங்கில் கலந்துகொண்டது இது முதல்முறை. சரிதானே?


ஆம். என்னுடைய 15 ஆண்டுகால திரையுலக வரலாற்றில், காஷ்மீரில் நடைபெற்ற பட சூட்டிங்கில் கலந்துகொள்வது இதுதான் முதல்முறை. என் பெற்றோர்களை சந்திக்க நான் பலமுறை காஷ்மீருக்கு வந்துள்ளேன். தற்போது தான் பட சூட்டிங்கிற்காக வந்துள்ளேன். உண்மையிலேயே, காஷ்மீர் அற்புதமான இடம். இங்கும் எனக்கு ரசிகர்கள் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.


பாகிஸ்தான் செல்லும் எண்ணம் உண்டா?


பாகிஸ்தான் நாட்டிற்கு செல்ல விருப்பமாக உள்ளேன். அந்த விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்ப்பதாக, கரீனா கபூர் கான் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in