அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
ரீ-என்ட்ரியில் தெனாலிராமன், எலி படங்களில் ஹீரோவாக நடித்தார் வடிவேலு. ஆனால் ரெண்டு படங்களுமே தோல்வியடைந்து விட்டன. இதில் எலி படம் தன்னை ஒருபோதும் ஏமாற்றாது என்று பெரிய அளவில் நம்பினார். அதன்காரணமாகவே மீடியாக்களிடம் கூட எகிறிப்பேசினார் வடிவேலு.
மேலும், இந்த படத்தின் பிரஸ்மீட்டின்போது, தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டபோது, அப்படியெல்லாம் இல்லை. ஹீரோ-காமெடியன் என இரண்டுவிதமாகவும் நடிப்பேன். எலிக்கு பிறகு நான் எதிர்பார்க்கிறபடி காமெடி படங்கள் அமைந்தால் நடிப்பேன் என்றார். அதனால் சமீபத்தில் ஒரு நிறுவனம் அவரை அணுகி காமெடியனாக நடிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாம். ஆனால், அப்படி நடிப்பதற்கு வடிவேலு போட்ட கண்டிசன்களை விடவும், அவர் கேட்ட சம்பளம் அந்த படத்தின் ஹீரோவை விட ஜாஸ்தியாக இருந்ததாம். இதனால் இதோ வருகிறேன் என்று படாதிபதி ஓட்டம் பிடித்து விட்டாராம். இந்த செய்தி கோலிவுட்டில் பரவியதை அடுத்து வடிவேலுவை காமெடி வேடத்தில் நடிக்க வைக்க யோசித்துக்கொண்டிருந்தவர்கள்கூட அதை மறுபரிசீலனை செய்யத் தொடங்கி விட்டனர்.