'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெண்கள் உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் பேணி காக்க வேண்டும் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார். பெண்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அமலா பாலிம், ஏராளமான பெண்கள் கேள்விகளை கேட்டனர். அவற்றுக்கு பதில் அளித்து பேசிய அமலா பால், கேரளத்திலிருந்து வந்த எனக்கு தமிழ் பட உலகில் முக்கிய இடம் கிடைத்துள்ளது. ஏற்கனவே தமிழில் நான் நடித்த 2 படம் வெற்றி பெற்றுள்ளது. மைனா படம் எனக்கு பேரும், புகழும் பெற்று தந்தது. தற்போது மதராசப்பட்டினம் டைரக்டர் விஜய் இயக்கும் பிதா, முப்பொழுதும் உன் ஞாபகங்கள், லிங்குசாமி இயக்கும் படத்திலும் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளேன். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மலையாளத்தில் நான் நடித்த படம் விரைவில் வெளி வர உள்ளது, என்றார்.
பெண்கள் ஆரோக்யம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், பெண்கள் தங்கள் உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் பேணி காப்பது மிகமுக்கியம். கண்ட கண்ட பொருட்களை சாப்பிடக் கூடாது. உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை சேர்த்து கொண்டால் இளமையாகவும், அழகாகவும் இருக்கலாம். குண்டான பெண்கள் ஆங்கில மருத்துவத்துக்குப் போகாமல், ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்" என்றார்.