ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மைனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த அமலாபால் சில வருடங்களிலேயே இயக்குநர் விஜய் உடன் காதல் வயப்பட்டார்.
காதலில் கசிந்துருகிய அமலாபால், கடந்த வருடம் விஜய்க்கு கழுத்தை நீட்டினார். கல்யாணத்துக்குப் பிறகு தமிழில் நடிப்பதில்லை என்று தீர்மானித்துள்ள அமலாபால், மலையாளத்தில் மட்டும் அவ்வப்போது நடித்து வருகிறார். அந்த வருமானம் போதவில்லையோ என்னவோ.. தற்போது புதிய பிசினஸ் ஒன்று தொடங்கி உள்ளார்.
வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சி, விருது வழங்கும் விழாக்களை நடத்திக் கொடுக்கும் பிசினஸ்தான் அமலாபாலின் புதிய பிசினஸ். இந்த பிசினஸில் ஈடுபட்ட பிறகு அடிக்கடி துபாய்க்கு பறக்கிறார் அமலாபால். அங்கே பல நிகழ்ச்சிகளை நடத்தியநிலையில் விரைவில் ஒரு விருது வழங்கும் விழாவையும் நடத்த இருக்கிறார். நேரடியாக தானே களத்தில் இறங்கினால் இமேஜ் பாதிக்கும் என்பதாலோ என்னவோ மீடியாவில் உள்ள கேரளத்தைச் சேர்ந்த அவரது ஆன்ட்டி பெயரில் இந்த தொழிலை செய்து வருகிறார்.