நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா (சைமா) கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2014ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 6 மற்றும் 7ந் தேதிகளில் துபாயில் நடக்கிறது. இதற்கான முறையான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிப் படங்களுக்கு 19 பிரிவின் கீழ் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு வேலையில்லா பட்டதாரி படம் 9 பிரிவிலும், கத்தி படம் 8 பிரிவிலும் போட்டியிடுகிறது. விஜய், தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி ஆகியோர் சிறந்த நடிகர்கள் பட்டியலிலும், ஹன்சிகா, அமலாபால், சமந்தா, லட்சுமிமேனன், வேதிகா ஆகியோர் சிறந்த நடிகைகள் பட்டியலிலும் இருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், பா.ரஞ்சித், ஏ.எல்.விஜய், கார்த்திக் சுப்புராஜ், விஜய் மில்டன் ஆகியோர் சிறந்த இயக்குனர்கள் பட்டியலிலும் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவரை ஜூரிகள் தேர்ந்தெடுத்து விழா அன்று அறிவிப்பார்கள்.