தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அட்டகத்தி படத்தில் தினேசுக்கு ஜோடியாக நடித்தவர் நந்திதா. அப்போது அவர்கள் இருவருமே புதுமுகங்கள்தான். அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என சில ஹிட் படங்களில் நடித்த நந்திதா, தற்போது இடம் பொருள் ஏவல், உப்புக்கருவாடு, புலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ராதாமோகனின் உப்புக்கருவாடு படத்தை அவர் பெரிய அளவில் எதிர்பார்க்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பது காமெடி நடிகர் கருணாகரன் என்றாலும், படக்கதை நந்திதாவின் கேரக்டரை மையமாக வைத்துதான் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த நிலையில், அடுத்தபடியாக நந்திதாவை புக் பண்ண சில டைரக்டர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜய்யுடன் புலி படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருக்கும் அவரோ அடுத்தபடியாக இரண்டாம் தட்டு ஹீரோக்களின் படங்களிலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால், அந்த படங்களில் நடிக்கப்போவது யார் என்பதைத்தான் முதலில் கேட்கிறாராம். அதற்கு, பிரபலமில்லாத ஹீரோக்கள் நடிப்பதாக அந்த டைரக்டர்கள் சொன்னால், நந்திதாவின் முகம் வாடி விடுவதோடு, இப்ப நான் கதை கேட்கிற மூடில் இல்லை என்று கூறி விடுகிறாராம்.