Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெல்லிசைக்கு பிறகே புதிய படம்! வெயிட் பண்ணும் காயத்ரி

15 ஜூலை, 2015 - 11:40 IST
எழுத்தின் அளவு:
I-am-not-fit-for-glamour-:-Gayathri

18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பொன்மாலைப்பொழுது, ரம்மி, மத்தாப்பு ஆகிய படங்களில் நடித்தவர் காயத்ரி. இந்த படங்களில் விஜயசேதுபதியுடன் இணைந்து அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் அந்த படத்தில் காயத்ரி கடைசி ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தார். அதேசமயம், அவர் படம் முழுக்க வந்து நடித்த படங்கள் தோல்வியடைந்து அவரை ஏமாற்றி விட்டன. இந்த நிலையில், தற்போது உலா, மெல்லிசை படங்களில் நடித்து முடித்துள்ளார் காயத்ரி. அதையடுத்து இன்னமும் அவர் எந்த புதிய படத்திலும் கமிட்டாகவில்லை.


இதுபற்றி காயத்ரியைக் கேட்டபோது, உலா படம் முன்பே முடிந்து விட்டது. விஜயசேதுபதியுடன் மூன்றாவது முறையாக நான் இணைந்து நடித்துள்ள மெல்லிசை படம் சமீபத்தில்தான் முடிந்தது. இந்த படத்தில் நான் ஒரு பாடகியாக நடித்திருக்கிறேன். கதையே என்னை சுற்றித்தான் அமைந்துள்ளது. அதனால் எனக்கு பர்பார்மென்ஸ் ஸ்கோர் பண்ண நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதோடு எனது ராசியான ஹீரோவான விஜயசேதுபதியுடன் நடித்திருப்பதால் இப்படம் வெற்றி பெற்று எனது மார்க்கெட்டில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறும் காயத்ரியை, கிளாமர் கதைகளில் நடிக்க சிலர் கேட்கிறார்களாம். ஆனால் அவருக்கு அப்படி நடிப்பதில் உடன்பாடில்லையாம். அதனால் மெல்லிசை வந்த பிறகு தனக்கு நல்ல படங்கள் கிடைக்கும் என்று அந்த படத்தின் ரிலீசுக்காக தற்போது வெயிட்டிங்கில் இருக்கிறாராம் காயத்ரி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in