தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கிருஷ்ணா-கயல் சந்திரன் இணைந்து நடித்து வரும் படம் கிரகணம். இவர்களுடன் கருணாகரன் மற்றும் புதுமுக நடிகை நந்தினி ஆகியோரும் நடிக்கின்றனர். திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தை இளன் என்ற புதியவர் இயக்க, பிவிபி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் அறிமுகமாகும் நாயகி நந்தினி மாயா என்ற தெலுங்கு படத்திலும், குஷி குஷியாகி என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார். அதோடு, 2010ம் ஆண்டு மிஸ் ஆந்திர பிரதேஷ் படத்தை வென்றவர் இந்த நந்தினி. இவர் இரண்டு படங்களில் ஏற்கனவே சிறப்பாக நடித்திருப்பதால் அவருக்கும் இந்த படத்தில் இரண்டு ஹீரோக்களுக்கும் இணையான வேடம் கொடுத்திருக்கிறார்களாம். மேலும், சமீபகாலமாக சில முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஹாலிவுட் படங்களை தழுவி உருவாகிக்கொண்டிருப்பதைப் போன்று இந்த படமும் ஒரு கொரியன் படக்கதையை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால் முழுக்க முழுக்க இல்லாமல் அதன் கதைக்கருவை எடுத்துக்கொண்டு தமிழ் படத்திற்கான மசாலாக்களை தடவி கதையை உருவாக்கியிருக்கிறார்களாம்.