ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருட்டி விசிடி, ஆன்லைன் பைரஸி என பிரச்சனைகள் சுழற்றி அடித்தாலும் 'பிரேமம்' படத்தை மலையாள ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள்.. படத்தின் வசூலும் முப்பது கோடி ரூபாயை தாண்டி, மலையாள சினிமா வரலாற்றின் வசூல் ரெக்கார்டில் மூன்றாம் இடத்தை பிடித்தும் விட்டது.. ஆனால் “இந்தப்படம் ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பாடாக்கர் இல்லையே” என்கிற ரேஞ்சில் கமென்ட் போட்டு தாக்கியிருக்கிறார் பிரபல மலையாள பின்னணி பாடகர் ஜி.வேணுகோபால்.
இது குறித்து வேணுகோபால், தனது பேஸ்புக் பக்கத்தில் “எல்லோரும் ஆஹா, ஓஹோவென பாராட்டுகிறார்களே என நானும் என் மனைவி, எனது 15 வயது மகள் மற்றும் அவளுடைய தோழி அனைவரும் 'பிரேமம்' படம் பார்த்தோம்.. படத்துல பெரிசா சொல்லிக்கிற மாதிரி என்ன இருக்குன்னே தெரியல.. யூஸ்லெஸ் படம்.. இதை எதுக்கு இப்படி தேவையில்லாம தூக்கி கொண்டாடுறாங்கன்னு தெரியல” என பிரேமம் படம் ஒன்றுமே இல்லை என்கிற ரேஞ்சில் எழுதியுள்ளார்.