மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிம்பு, ஹன்சிகா நடித்து நீண்ட வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து 'வாலு' திரைப்படத்தை டி.ராஜேந்தர் வாங்கிய பிறகுதான் அந்தப் படத்திற்கு ஒரு உயிர் வந்தது. ஜுலை 17ம் தேதி படத்தை வெளியிடுவதாக கடந்த ஒரு மாத காலமாகவே டிஆர் விளம்பரம் செய்து வந்தார். ஆனால், அதற்குள் படத்தின் வெளியீட்டை எதிர்த்து ஒரு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்திற்கு தடை விதித்து விட்டார்கள். இந்தப் படத்தை எதிர்த்து மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். அவையும் நாளை அல்லது மறுநாள் விசாரணைக்கு வரும் என்கிறார்கள். இதனால் இந்த வாரம் 'வாலு' வெளிவருவது சந்தேகம்தான் என்கிறார்கள்.
இதனிடையே, இந்தப் படத்தை வெளிவராமல் தடுக்க சிலர் சதி செய்கிறார்கள் என்று டிஆர் கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து குற்றம் சாட்டினார். 'வாலு'வுக்குப் போட்டியாக வரும் ஒரே படம் 'மாரி' மட்டுமே. எனவே, 'மாரி' படத்தின் நாயகன் தனுஷ், படத்தின் தயாரிப்பாளர்கள் மீதும் சந்தேகம் திரும்பியது. ஆனால், அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை, 'வாலு' படத்தைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் பைனான்ஸ் பிரச்சனையால் மட்டுமே இப்படிப் படத்திற்கு தடை வந்துள்ளது என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.