வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
'பாகுபலி' படத்தின் தயாரிப்புச் செலவு என்பது எவ்வளவு என்று இதுவரை படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமே வாய் திறந்து சொல்லாத நிலையில் 175 கோடியிலிருந்து 250 கோடி வரை செலவாகியுள்ளது என பலரும் சொல்லி வருகிறார்கள். அதேப்போல படம் வெளிவந்த முதல் நாள் வசூல் 50 கோடியிலிருந்து 75 கோடி வரை என்று சொல்லி வருகிறார்கள். தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு கிழமைகளை சேர்த்தால் வசூல் இன்னும் கூடும். அப்படிப்பார்க்கையில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.50 கோடி வசூல் என்று வைத்தாலும் மூன்று நாளில் பாகுபலி படம் ரூ.150 கோடி வசூலை நிச்சயம் தாண்டியிருக்கும்.
தெலுங்குத் திரையுலகின் இதுவரையிலான மிகப் பெரும் வசூல் படமாக 'அத்தாரின்டிக்கி தாரேதி' படம்தான் இருந்து வந்தது. அந்தப் படத்தின் மொத்த வசூல் 85 கோடி ரூபாய். அந்த வசூலை இரண்டே நாட்களில் 'பாகுபலி' படம் முறிடியத்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டது என்கிறார்கள்.
இந்தியாவில் பாலிவுட் படங்கள் தான் அதிகவசூலை குவித்து வரும். அப்படி பார்க்கையில் இந்த பாகுபலி படத்தின் வசூல் இந்தி திரையுலகினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் ஹீரோக்கள் மட்டுமே நடித்த பாகுபலி படத்திற்கு இந்தி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பாகுபலி படத்தில் ராஜமௌலி காட்டிய பிரமாண்டமும், இந்தியில் இப்படத்தை வாங்கி வௌியிட்ட கரண் ஜோகரும் தான் என்று சொன்னால் மிகையாகாது.
தென்னிந்திய மொழிப் படங்களில் ரஜினிகாந்த், ஷங்கரின்ன் சாதனையை ராஜமௌலி முறிடியத்து விட்டார் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. ஆக, அடுத்த சாதனைக்கு இப்போது ரஜினியும், ஷங்கரும் தயாராக வேண்டும். அதுமட்டுமல்ல அமீர்கான், ஷாரூக்கான், சல்மான் கான் ஆகியோரது படங்களின் வசூல் சாதனையையும் பாகுபலி முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.