வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷாவும், தமிழில் இன்னும் நிலையான மார்க்கெட்டைப் பிடிக்கப் போராடிக் கொண்டிருக்கும் சித்தார்த்தும் சுமார் 10 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்கள். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த சித்தார்த் அதன் பின் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அடுத்த படத்திலேயே தன்னுடைய குருநாதர் மணிரத்னம் இயக்கத்தில் 'ஆயுத எழுத்து' படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்தார். இந்தப் படத்தில்தான் சித்தார்த்தும், த்ரிஷாவும் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்தனர். அடுத்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற 'நூவொஸ்தாவன்டே நேநொன்தன்டானா' படத்தில் ஜோடி சேர்ந்தனர்.
தமிழிலும், தெலுங்கிலும் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்த இவர்கள் இருவரும் அதன் பின் தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களாகினர். ஆனாலும் இரண்டாவது முறையாக இரண்டு பேரும் ஜோடி சேர்ந்து நடிக்காமலே இருந்தனர். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'அரண்மனை 2' படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர். இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. சுந்தர்.சி இயக்கும் இந்தப் படத்தில் ஹன்சிகா, பூனம் பஜ்வா ஆகியோரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
இதற்கு முன் தான் நடித்த 'காவியத் தலைவன், எனக்குள் ஒருவன்' ஆகிய படங்கள் தோல்வியடைந்தாலும் தமிழில் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் மூலம் தனக்கு மீண்டும் ஒரு என்ட்ரியைக் கொடுத்த சுந்தர்.சி இந்த 'அரண்மனை 2' படத்திலும் மீண்டும் ஒரு வெற்றியைத் தருவார் என்ற நம்பிக்கையுடன் சித்தார்த் இருக்கிறாராம்.