ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாசில் இயக்கத்தி்ல், விஜய் நடிப்பில் வெளியான "காதலுக்கு மரியாதை" படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சரண்யா மோகன், விரைவில் மண வாழ்க்கையில் இணைய உள்ளார்.
காதலுக்கு மரியாதை, 'யாரடி நீ மோகினி', 'வெண்ணிலா கபடி குழு', 'ஜெயம் கொண்டான்', 'ஈரம்', 'அழகர்சாமியின் குதிரை', 'வேலாயுதம்' உள்ளிட்ட தமிழ் படங்கள் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பல படங்களில் நடித்தவர் நடிகை சரண்யா மோகன். இவர் பரதநாட்டிய கலைஞரும் கூட.
நடிகை சரண்யா மோகனுக்கு, தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளது. பல் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணாவை, விரைவில் சரண்யா மோகன் கரம்பிடிக்க உள்ளார். இவர்களது நிச்சயதார்த்தம், திருவனந்தபுரத்தில் நடந்தது. நிச்சயதார்த்த படங்களை சரண்யா மோகன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். நிச்சயதார்த்தம் நடந்ததையும் அதில் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.
எனக்கும் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. என் வாழ்க்கையின் முக்கிய நாளாக இது அமைந்துள்ளது. நிச்சயதார்த்தம் நடந்ததை இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். திருமணத்துக்கு பிறகும் எல்லோரது வேண்டுதலும் எனக்கு வேண்டும். என் மேல் அன்பும் ஆதரவும் காட்டும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேஸ்புக்கில் குறிப்பிட்டு உள்ளார்.
சரண்யா மோகனுக்கு, திரையுலக பிரபலங்ஙகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.