ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நெஞ்சிருக்கும் வரை எனும் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமான தெலுங்கு நடிகை பூனம் கவுர் பல தெலுங்கு, தமிழ் மற்றும் மளையாள படங்களிலும் நடித்துள்ளார். இறுதியாக அச்சாராம் எனும் தமிழ் படத்தில் நடித்த பூனம், மிஸ் தெலுங்கானா நிகழ்ச்சியின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆர். கே மீடியா நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றது. 2006 ஆம் ஆண்டு ஆந்திர அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பூனம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பெமினா தென்னிந்திய அழகிப் போட்டியிலும் அழகி பட்டம் வென்றார். இந்த தகுதிகளைக் கொண்டுள்ளதாலும் புகழ்பெற்ற நடிகை என்பதாலும் பூனம் மிஸ் தெலுங்கானா நிகழ்ச்சிக்கு தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஆர். கே மீடியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பூனம் தனக்கு கிடைத்த அனுபவங்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் போட்டியாளர்களுக்கு வழங்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.