தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகைகளின் போட்டோக்களை மார்ப்பிங் செய்து அவர்களை ஆபாசமாக வௌிப்படுத்தி இணையதளங்களில் பரப்பிவிடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனுஷ்கா, லட்சுமி மேனன், நயன்தாரா, ராதிகா ஆப்தே, உள்ளிட்ட பல நடிகைகளின் வரிசையில் இப்போது சேர்ந்திருப்பது நடிகை ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து ஜீவா, வௌ்ளக்காரத்துரை, காக்கி சட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த படங்கள் எல்லாமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றவை. ஸ்ரீதிவ்யாவின் ஹோம்லி லுக்கும், அவரது நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் விஷமிகள் சிலர் ஸ்ரீதிவ்யாவின் போலியான ஆபாச படத்தை இணையதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஸ்ரீதிவ்யாவை இந்த செய்தி மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. அவரிடம் பலர் இதுபோன்று ஆபாச படம் வந்துள்ளதே என்று போன் மேல் போன் போட்டு விசாரிக்கிறார்களாம். இதனால் மிகவும் கவலையில் இருக்கிறார் ஸ்ரீதிவ்யா.