Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜூலை 10-ல் ஆர்யாவின் விஎஸ்ஓபி., டீசர் ரிலீஸ்!

09 ஜூலை, 2015 - 18:56 IST
எழுத்தின் அளவு:
Aryas-VSOP-teaser-releasing-on-July-10

பாஸ் என்ற பாஸ்கரன் படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யாவும், இயக்குநர் ராஜேஷூம் இணைந்துள்ள படம் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவுங்க. ஆர்யா ஜோடியாக தமன்னா நடிக்கிறார், கூடவே சந்தானம் காமெடி ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது ஆர்யாவுக்கு 25வது படம். தனது இந்த 25வது படம் பற்றிய ஒரு செய்தி ஒன்று வௌியிட்டிருக்கிறார் ஆர்யா. அதில் கூறியிருப்பதாவது...


நம்ம ஊருக்கு மெட்ரோ ட்ரெய்ன் வந்திருச்சு... நூற்று நாலு டிகிரி வெயில் குறைஞ்சு கொஞ்சம் மழையும் வந்திருச்சு. அடுத்து என்ன... நம்ம படத்தோட டீஸர் வரவேண்டியதுதான... வர்ற வெள்ளிக்கிழம 10. ஜூலை, 2015 அன்னிக்கு மாலை ஆறு மணிக்கு வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) படத்தோட முதல் டீஸர் யூ டியூப்ல வருது. இதை சோனி நிறுவனம் வெளியிடுறாங்க. எனக்கு நடந்த எல்லா நல்ல விஷயங்களிலும் நீங்க இருந்திருக்கீங்க... கொண்டாட்டங்களிலும் கஷ்டங்களிலும் கூட நின்னுருக்கீங்க.


இப்போது என் சினிமா பயணத்தில் முக்கியமான சந்தோஷமான கட்டத்தை அடைந்திருக்கிறேன். இதை எப்போதும் போல முதலில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய 25வது படமான 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' (VSOP) இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. டீஸருக்கு பிறகு படத்தின் சிங்கிள் 18 ஜூலை 2015 அன்று வெளியாகிறது. ஆகஸ்ட் 14, 2015 அன்று படம் திரைக்கு வருகிறது.


ஐந்து வருடங்களுக்குப் பிறகு நான், சந்தானம், ராஜேஷ் சேர்ந்து வருகிறோம். இந்தப் படமும் பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரியே செம ஜாலியான கலகலப்பான குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். உங்களை முழுமையாக சந்தோஷப்படுத்தும். இதில் என்னுடன் ஹீரோயினாக தமன்னா சேர்ந்திருக்கிறார். இன்னும் கருணாகரன், வித்யூலேகா, முக்தா பானு எனப் பெரிய நட்சத்திர பட்டாளம் இருக்கிறது!


கேமரா என் நண்பன் நீரவ் ஷா, இசைக்கு மியூசிக் சென்சேஷன் இமான், எடிட்டிங்கிற்கு தேசிய விருது விவேக் ஹர்ஷன், ஆர்ட் டைரக்டர் ஜாக்கி என அழகான டீம் அமைந்திருக்கிறது. இந்த கால் செஞ்சுரி பயணத்தில் அன்பிலும் பாராட்டுகளிலும் ஆரோக்கியமான விமர்சனங்களிலும் என்னை வளர்த்தெடுத்த அத்தனை இதயங்களையும் நினைத்துக் கொள்கிறேன். உங்களால்தான் இது சாத்தியப்பட்டது.


மீடியா நண்பர்களுக்கும் என் ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் எப்போதும் என் நன்றிகள்... ப்ரியங்கள்..! எப்போதும் போல் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) படத்துக்கும் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.


இவ்வாறு நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in