சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
'பாபநாசம்' படம் வெளிவந்ததும் கமல்ஹாசனையும், மோகன்லாலையும் ஒப்பிட்டு பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்கள். அதோடு, சில ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் 'பாபநாசம்' படத்தில் ரஜினிகாந்த்தான் நடித்திருக்க வேண்டும். ஆனால், படத்தில் போலீசிடம் அடிவாங்குவது போல் காட்சிகள் இருப்பதால், அதை காட்சிகளை ரஜினி ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அதனால் ரஜினி நடிக்கவில்லை என்றும் தங்கள் பங்கிற்கு ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டார்கள்.
இவையிரண்டுக்கும் சேர்த்துமான ஒரு பதிலை நேற்று நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசினார். “நல்ல நம்பிக்கையுள்ள கலைஞனால்தான் இன்னொரு நடிகனைப் பாராட்ட முடியும். மோகன்லால் அவர்கள் சொன்னதாக கேள்விப்பட்டது, சில நண்பர்களும் அது பற்றி சொன்னார்கள். இந்தப் படத்தை தமிழில் படமாக்கினால் என் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் சொல்லியிருக்கிறார். அந்தப் பெருந்தன்மைக்காகவும், பரிந்துரைக்காகவும் நான் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்,” என கமல்ஹாசன் பேசினார்.
ஒரே பதிலில் பல கேள்விகளுக்கு பதிலளித்து விட்டார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடித்தால்தான் நன்றாக இருக்குமென ஒரிஜனல் படத்தில் நடித்த நாயகனே சொல்லிவிட்ட பிறகு ரஜினிகாந்த் நடிப்பது பற்றிய பேச்சே தேவையில்லை. அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் பற்றி மோகன்லால் எப்படி நினைத்திருக்கிறார் என்பதும் அவர் பரிந்துரைத்ததிலிருந்தும் விளங்கும்.