பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ராஜமௌலியின் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள 'பாகுபலி' படம் தென்னிந்திய படங்களின் வசூல் வரலாற்றில் புதிய சாதனை படைக்குமா என்றே கோலிவுட், டோலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. சுமார் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ள 'பாகுபலி' படத்தின் முதல் நாள் வசூல், முதல் வார வசூல் ஆகியவை நிச்சயம் மிகப் பெரும் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் வார வசூலில் பொதுவாக எந்தப் பிரச்சனையும் இருக்க வாய்ப்பில்லை. தெலுங்கில் நீண்ட வரிசையில் நின்று தியேட்டர்களில் ரசிகர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். இது அப்படியே தொடர்வது என்பது படத்தின் ரிசல்ட்டில்தான் உள்ளது.
ஆந்திரா, தெலுங்கானாவில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் கர்நாடகாவிலும் அதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழ்ப் படமாகவே வெளியானாலும் தியேட்டர்காரர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இல்லை என்றே சொல்கிறார்கள். கேரளாவிலும் மறைமுகமான எதிர்ப்பு படத்திற்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. டப்பிங் படங்களைக் கட்டுப்படத்த வேண்டும் என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம். இதனிடையே கேரளாவில் 'பாகுபலி' படத்தின் தமிழ் மொழிப் படத்தைத்தான் ரிலீஸ் செய்ய உள்ளார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை அதிக வசூல சாதனை புரிந்த படமாக 'எந்திரன்' படமே இருக்கிறது. அந்த சாதனையை 'பாகுபலி' முறியடிக்குமா என்பதே இப்போது திரையுலக வட்டாரங்களில் காணப்படும் பேச்சாக உள்ளது.