ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் சுரேஷ்கோபியை வைத்து 16 படங்களை இயக்கியுள்ளார் ஷாஜி கைலாஷ். இப்போது மீண்டும் தங்களது 17வது படத்தில் இணைந்து அசத்தவுள்ளார்கள் இவர்கள் இருவரும். கேரளாவின் இப்போதைய அரசியல் களத்தை வைத்து உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு முதலில் 'தி ஸ்டேட்' என பெயர் வைத்திருந்தார்கள். இப்போது அதே அர்த்தம் தரக்கூடிய மாதிரி 'சமஸ்தானம்' என டைட்டிலை மாற்றி வைத்துவிட்டார்கள். இந்தப்படத்திற்கான துவக்கவிழா பூஜை இன்று காலை நடைபெற்றது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், 2002ல் சுரேஷ்கோபி தமிழில் ராஜ்கபூர் இயக்கத்தில் சரத்குமாருடன் இணைந்து 'சமஸ்தானம்' என்கிற படத்தில் நடித்திருந்தார். அது கிராமத்து கதைக்களத்தில் இரண்டு நண்பர்களின் நட்பு பற்றிய படமாக இருந்தது. ஆனால் இப்போது மலையாளத்தில் உருவாக இருக்கும் சமஸ்தானம் படமோ, அரசியல் சரவெடியாக இருக்கப்போகிறது. படத்தில் சுரேஷ்கோபி காவல்துறை ஏ.டி.ஜி.பி.யாக நடிக்கிறார். மொத்தம் மூன்று கதாநாயகிகள் நடிக்கும் இந்தப்படத்தில் சுகன்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.