Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆகஸ்டில் திரைக்கு வரும் கல்யாண் ராமின் இரண்டு படங்கள்

08 ஜூலை, 2015 - 13:51 IST
எழுத்தின் அளவு:
Kalyan-rams-two-movie-to-be-relase-on--august

பட்டாஸ் படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டிற்கு பின்னர் தெலுங்கு நடிகர் கல்யாண் ராம் நடித்துள்ள ஷேர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தினை இயக்குநர் மல்லிகார்ஜுனா இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையமைப்பில் நாயகியாக சோனல் சௌகன் நடிக்கும் இப்படத்தினை தயாரிப்பாளர் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தினை ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


இப்படம் மட்டுமல்லாமல் கல்யாண் ராம் தயாரித்துள்ள கிக் 2 படமும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது. மாஸ் மகாராஜா நடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற கிக் படத்தின் இரண்டாம் பாகமாக கிக் 2 படம் டோலிவுட்டில் உருவாகியுள்ளது.என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் நடிகர் கல்யாண் ராம் தயாரித்துள்ள கிக் 2 படத்தை இயக்குநர் சுரேந்தர்ரெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in