'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
தமிழில் மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன் என பல படங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. தற்போது வில் அம்பு, கத்துக்குட்டி, அச்சமின்றி என சில படங்களில் முக்கிய கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், தமிழில் அதிக படங்களில் கமிட்டாகியிருக்கும் நேரத்தில் மற்ற மொழிகளில் நடிக்க கவனத்தை திருப்பினால் இங்கு நிலையான இடம் கிடைக்காமல் போய் விடும் என்பதால், தற்போதைக்கு தமிழே கதியென்று இறங்கி அடித்து வருகிறார் சிருஷ்டி டாங்கே.
மேலும், சில நடிகைகளைப்போன்று நான் சிங்கிள் ஹீரோயினாக நடித்து வரும் நேரத்தில் கேரக்டர் ரோல்களில் நடிக்க மாட்டேன் என்ற கண்டிசனெல்லாம் போடாமல், முன்னணி நடிகர்களின் படங்களில் கெஸ்ட் ரோல் என்றாலும் நடித்து அவர்களை நண்பர்களாக்கி கொள்கிறார் சிருஷ்டி.
அவரது இந்த அணுசரணையான போக்கு காரணமாகத்தான் அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றபோதும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் இதுவரை சம்பள விசயத்தில் ஓரளவு அடக்கி வாசித்து வந்த சிருஷ்டி டாங்கே, தற்போது படத்துக்கு 10 லட்சம் கேட்கிறார். அதோடு, இந்த சம்பளத்துக்கு நீங்கள் ஓகே என்றால் சற்று கிளாமராகவும் நடிக்க தயார் என்று தனது மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார்.