Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதயநிதி ஜோடியாக மீண்டும் ஹன்சிகா

08 ஜூலை, 2015 - 10:30 IST
எழுத்தின் அளவு:
Udhayanithi---Hansika-to-pair-again

தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின், ராஜேஷ் இயக்கிய 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அப்போதைய முன்னணி நடிகையான ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன் பிறகு அவர் நடித்து வெளிவந்த இரண்டு படங்களான 'இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா' படங்களிலும் முன்னணி நடிகையான நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தார்.


மற்ற முன்னணி ஹீரோக்கள் அளவிற்கு தனது ஜோடியைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பவர் உதயநிதி. இப்போது நடித்துக் கொண்டிருக்கும் 'கெத்து' படத்திலும் 'ஐ' பட நாயகியான எமி ஜாக்சனுடன் தான் ஜோடி சேர்ந்திருக்கிறார். அடுத்து 'என்றென்றும் புன்னகை' படத்தை இயக்கிய அகமது இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் மீண்டும் ஹன்சிகாவை தனது ஜோடியாக்கியிருக்கிறார்.


'ஜாலி எல்எல்பி' என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக்காக உருவாக உள்ள இந்தப் படத்தில் ராதாரவி, பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். படத்தின் தற்போது முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in