தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷ், காஜல் அகர்வால் நடித்துள்ள 'மாரி' படத்தின் தணிக்கை நடந்து முடிந்து படத்திற்கு 'யு' சர்டிபிகேட் வழங்கியுள்ளார்கள். இப்போதெல்லாம் ஒரு படத்தின் தணிக்கை முடிந்த பிறகே அந்தப் படத்தின் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுகிறார்கள். அதனால், நேற்று மாலைதான் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி ஜுலை 17ம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான தனுஷ் அவருடைய டிவிட்டரில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
தனுஷின் 32வது படமாக 'மாரி' வெளிவர உள்ளது. அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படங்களும் இந்தக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. தனுஷ் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'ஷமிதாப்' ஹிந்திப் படமும், 'அனேகன்' தமிழ்ப் படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்தப் படத்தின் டீசர், டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பை வைத்து இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை திரையுலக வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன் காதல் படங்களை இயக்கிய பாலாஜி மோகன், தனுஷ் நடித்துள்ள இந்த ஆக்ஷன் படத்தை எப்படி இயக்கியிருப்பார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
அதேசமயம், 'வாலு' படமும் அதே தேதியில் தடைகள் பல கடந்து வர இருக்கிறது. இதன்மூலம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனுஷும், சிம்புவும் ஒரே தேதியில் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுவே இரண்டு படங்களுக்கும் ஒரு இலவச விளம்பரம்தான்...!