இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகைகளின் பாதையை அவர்கள் நடிக்கும் படங்களின் ரிசல்ட்தான் தீர்மானிக்கிறது. 'வழக்கு எண் 18/9' படத்தில் மாடர்னான பள்ளி மாணவியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். அந்தப் படத்தில் அவருக்கு நல்லபெயர் கிடைத்தது. அதன் பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கௌப்பணும் பாண்டியா ஆகிய படங்கள் வெற்றிப்படமாக அமையவில்லை.
விஜய்சேதுபதி உடன் நடிக்க ஒப்பந்தமான இடம்பொருள் ஏவல் படத்திலிருந்து நீக்கப்பட்டார். எனவே வெறுத்துப்போன மனிஷா யாதவ் தற்போது ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்திருக்கும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் படுகவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். 'லிப் லாக்' உட்பட எல்லா விஷயங்களுக்கும் இப்படத்தில் 'டபுள் ஓகே' சொன்ன மனீஷா, இப்போது நடன இயக்குனர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் 'ஒரு குப்ப கதை' படத்தில் வேறு பாணியில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் கவர்ச்சிக்கு குட்பை சொல்லிவிட்டு வித்தியாசமான வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மனீஷா யாதவ்விற்கு சேரிப் பெண் வேடமாம். இப்படத்தின் கேரக்டருக்கு தனக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் 'ஒரு குப்ப கதை'யின் நாயகி.
வெரிகுட் மனிஷா.