பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும்' படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கியுள்ள படம் 'மாரி'. தனுஷ், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனைவரும் பார்க்கும்படியான 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. ஒரு ரவுடியைப் பற்றிய கதைதான் என்பதை டிரைலரைப் பார்க்கும் சின்னக் குழந்தை கூட சொல்லிவிடும்.
ஏற்கெனவே இந்தப் படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டிரைலரின் கடைசியில் தனுஷ் சொல்லும் டயலாக்கான 'செஞ்சுருவேன்' பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல இந்தப் படத்தின் டிரைலரை ரஜினிகாந்த் வெர்ஷன், விஜயகாந்த் வெர்ஷன், பிரேம்ஜி வெர்ஷன் என பல விதங்களில் ரசிகர்கள் உருவாக்கி யு டியூபில் உலவ விட்டு வருகின்றனர்.
'புதுப்பேட்டை' படத்தில் கொக்கி குமார் கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் அதன் பிறகு பல அதிரடிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் 'மாரி' கதாபாத்திரத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.