தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சேனல்களில் நடக்கும் பாட்டு போட்டியாக இருந்தாலும் சரி, நடனப் போட்டியாக இருந்தாலும் சரி. அதில் டைட்டில் வின் பண்ணுகிறவர்களின் அடுத்த இலக்கு சினிமாதான். அந்த வவையில் இப்போது ஹீரோவாகியிருக்கிறார் சந்துரு.
விஜய் தொலைக்காட்சி நடத்திய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் டைட்டில் வென்றவர் சந்துரு. நிகழ்ச்சி ஒளிபரப்பான காலத்தில் அவரது நடனத்திற்கென்றே தனி ரசிகர் வட்டம் இருந்தது. இப்போது சந்துரு காதல் காலம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஐவராட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்த நித்யா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஜெய ஆனந்த் இசை அமைத்துள்ளார். சோமசுந்தரா என்பவர் இயக்குகிறார். செல்வ செழிப்பில் வளரும் ஒரு பணக்கார வீட்டு பையன் பெற்றவர்கள் கொடுக்கும் செல்லத்தால் எப்படி வீழ்கிறான். ஒரு பெண்ணால் எப்படி எழுகிறான் என்கிற கதை. சந்த்ருவின் ஆட்டத்திற்கும் படத்தில் வாய்ப்பிருக்கிறதாம்.