தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் டெம்பர் படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது இயக்குநர் சுகுமார் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். தயாரிப்பாளார் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்து வரும் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார்.இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புகள் நடைபெற்று முடிந்து விட்டன. அதன் பின்னர் ஜூன் மாத துவக்கத்திலேயே அடுத்த கட்டப் படப்பிடிப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தாமதங்களுக்கு பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 5 ஆம் தேதி லண்டனில் ஆரம்பித்துள்ளது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஜூனியர் என்.டி.ஆரின் புகைப்படம் ஒன்று வெளிவந்து ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. மிகவும் ஸ்டைலாக தோன்றும் ஜூனியர் என்.டி.ஆர் சிகை அலங்காரம் ரசிகர்களைக் வெகுவாக கவர்ந்துள்ளது. லண்டனில் தொடர்ந்து நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.