மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
தமிழில் வெல்கம் டிவி என்ற பெயரில் ஒரு புதிய டிவி சேனல் நாளை புதன்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. சென்னையை மட்டுமே முதல் இலக்காகக்கொண்டு லோக்கல் சேனலாக உதயமாகியிருக்கும் இந்த வெல்கம் டிவி, அடுத்த ஓரிரு மாதங்களில் உலகமெங்கும் தெரியக்கூடிய சார்ட்டிலைட் சேனலாக உருவெடுக்கிறதாம். முக்கியமாக, காலை எழுந்ததும் சுப்ரபாதம், அதன்பிறகு பக்தி பாடல்கள் என தொடங்கி ஆக்சன், காமெடி காட்சிகள் என அந்தந்த நேரங்களுக்கு ஏற்றபடி நிகழ்ச்சிகளை இந்த சேனலில் ஒளிபரப்பாகிறதாம். அதோடு, தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் உள்ள மற்ற மொழிகளில் ஹிட்டடித்த சினிமாக்களும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாம்.
மேலும், 24 மணி நேரமும் நிகழ்ச்சிகளை வழங்க இருக்கும் இந்த வெல்கம் டிவியில் திரைக்கு வந்த படங்கள் மட்டுமின்றி திரைக்கு வராத படங்களையும் சமபந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் முறையான அனுமதி பெற்று ஒளிபரப்பு செய்கிறார்களாம். அதோடு தினந்தோறும் இரவில் ஒரு ஹாலிவுட் படம் கட்டாயமாக இடம்பெறுகிறதாம். ஆனால் ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் வகையிலான படங்கள் மட்டுமே ஒளிபரப்பாகிறதாம்.